/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காரங்காட்டில் படகு சுற்றுலா இன்று முதல் நிறுத்தம்
/
காரங்காட்டில் படகு சுற்றுலா இன்று முதல் நிறுத்தம்
ADDED : செப் 07, 2025 01:34 AM

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக 2017 ல் அறிவிக்கபட்டது. இதில் காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வனத்துறையினருடன் சேர்ந்து செயல்படும் வகையில் தலைவர், செயலாளர், பொருளாளர் என எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அக்கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் படகுக்கு டோக்கன் வழங்குவது, படகு ஓட்டுவது, ஓட்டல் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பணியாளர்களை மாற்றுவது சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமாக நேற்று கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியாளர்களை மாற்றி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக மாற்றவில்லை. ஆகவே படகு போக்குவரத்தை நிறுத்த வேண்டும். சுற்றுலா மையத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், தலைவர், செயலாளர் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். அது வழக்கமாக நடந்து வருகிறது. செப்.12 ல் வனஉயிரின காப்பாளர் புதிதாக பொறுப்பேற்கிறார்.
அதன்பிறகு பேச்சுவார்த்தைக்கு பின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று (செப்.7) முதல் படகு போக்குவரத்து நிறுத்துவது, பேச்சுவார்த்தைக்கு பின் நடவடிக்கை எடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.