ADDED : செப் 07, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் பட்டணம்காத்தான் போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் திவ்யா, 21. இவரது கணவர் விபத்தில் இறந்து விட்டார். இரு குழந்தைகளுடன் தாய் கருப்பாயி, 45, வீட்டில் திவ்யா வசித்து வந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன், திவ்யாவுக்கும் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த, திருமணம் ஆகாத கருப்பசாமி, 23, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதை கருப்பாயி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, செப்., 4ல் கருப்பாயியை வெட்டி கொலை செய்து விட்டு தப்பினார்.
அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.