/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிச்சை மூப்பன்வலசையில் பலத்த காற்று வீசும்போது படகு போக்குவரத்து ரத்து மின்னணு முறையில் டிக்கெட் வழங்கல்

ADDED : ஏப் 18, 2025 05:40 AM
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி பிச்சை மூப்பன் வலசையில் மன்னார் வளைகுடா சூழலில் சுற்றுலா தளம் செயல்படுகிறது. இங்கு மின்னணுமுறையில் டிக்கெட் வழங்கப்படும் நிலையில் பலத்த காற்று வீசும் போது படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
2020ல் துவக்கப்பட்ட சூழல் சுற்றுலா தளத்தில் மன்னார் வளைகுடா கடலில் இருந்து 3 கி.மீ.,ல் அமைந்துள்ள மணல் திட்டிற்கு கண்ணாடி இழையிலான படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது.
லைப் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு கவசம்அணிந்தவர்கள் மட்டுமேபடகிற்கு 12 பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர்.
சவாரி கட்டணமாக நபருக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. முன்பு பணமாக பெற்ற நிலை மாறி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆன்லைன் மின்னணு பண பரிவர்த்தனை மூலமாக மட்டுமே சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.
அழகிய பவளப்பாறைகளை கண்ணாடி இழையிலான படகில் இருந்து கண்டு ரசிக்கும் வகையில், அவற்றின் பயன்கள் குறித்து கைடுகள் வழிகாட்டுகின்றனர். 45 நிமிடங்கள் சுற்றிவர ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதிக காற்று மற்றும்பேரலைகள் எழும் போதுதற்காலிகமாக மட்டுமே சூழ்நிலையை பொறுத்து படகு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இயல்பு நிலைக்கு வந்தவுடன் படகு போக்குவரத்து நடக்கிறது.
தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருந்து கண்ணாடி இழையிலான படகில் சவாரி செய்து திரும்புகின்றனர்.