/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
/
கடலில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
ADDED : நவ 26, 2025 01:11 AM

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை கடலில் படகுக்கு நங்கூரம் இடுவதற்காக சென்ற வாலிபரை கடல் அலை இழுத்துச் சென்றது. 22 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது. நம்புதாளையை சேர்ந்தவர் முத்துராக்கு 50. மீனவரான இவருக்கு சொந்தமான நாட்டு பைபர் படகு கடற்கரையிலிருந்து 50 மீட்டரில் கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு பலத்த காற்று வீசியதால் படகை பாதுகாக்கும் வகையில் நங்கூரம் இட்டு நிறுத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் 30, ஆகாஷ் 20, தொண்டீஸ்வரன் 18, ஆகிய மூவரும் கடலுக்குள் சென்றனர்.
நங்கூரம் போட்டு விட்டு நீந்தி கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தொண்டீஸ்வரனை சுழல் இழுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள், சங்கு எடுப்பவர்கள், தொண்டி மரைன் போலீசார், திருவாடானை தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சோழியக்குடி, புதுக்குடி போன்ற பல்வேறு பகுதிகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை 7:30 மணிக்கு தொண்டீஸ்வரன் நீந்தி சென்ற இடத்தில் உடல் கிடந்தது. 22 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.

