/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
/
பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ADDED : நவ 26, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதியில் சூறாவளி யுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.
நேற்று காலை முதல் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்தது. கடலில் சூறாவளி வீசி கொந்தளிப்பு ஏற்பட்டது.
மீனவர்களுக்கு மீன் துறையினர் தடை விதித்தனர்.
நேற்று பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க அறிவுறுத்தப் பட்டது.

