/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் புத்தகத்திருவிழாஎப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
/
ராமநாதபுரத்தில் புத்தகத்திருவிழாஎப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
ராமநாதபுரத்தில் புத்தகத்திருவிழாஎப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
ராமநாதபுரத்தில் புத்தகத்திருவிழாஎப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 09, 2025 04:58 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் புத்தத்திருவிழா தொடர்பானஅறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அரசு பொதுத்தேர்வுகளுக்குமுன்னதாக இந்த மாதமே புத்தகத்திருவிழாவை நடத்த மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்வலியுறுத்தினர்.
மாவட்டத்தில் 2024ல் பிப்.,2 முதல் 12 வரை 6வது புத்தத்திருவிழா நடந்தது. நடப்பு 2025ம் ஆண்டில் இதுவரை புத்தகத் திருவிழா எப்போது என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கவில்லை.
நேற்று (பிப்.,7) முதல் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில்செய்முறைத் தேர்வுகள் துவங்கியுள்ளன.
அடுத்த மாதம் பிளஸ் 2,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே 7வது புத்தகத்திருவிழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில்ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித்துறை, மாவட்டநிர்வாகம் நடப்பாண்டில் இந்த மாதமே புத்தத்திருவிழா நடத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு கூறுகையில் புத்தகத் திருவிழா தொடர்பாக கலெக்டர் உத்தரவில்ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம். நடைபெறும் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.