ADDED : ஆக 20, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கம்பன் கழக அரங்கில், கலை இலக்கியக் கழகத் தலைவர் சுப்பையா எழுதிய கம்பன் காவியம் காட்டும் வழிஆய்வு நுால் வெளி யிடப்பட்டது.
கலை இலக்கிய கழக துணைத் தலைவர் தஸ்லிம் காஜா வரவேற்றார். கம்பன் கழக பொதுச் செயலாளர் மானுடப்பிரியன் தலைமை வகித்து நுாலை வெளியிட்டார். கவிஞர் குரா, மகளிர் அணி தலைவி கவிதாயினி, கலை இலக்கியக் கழக பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் கலை இலக்கிய மன்றத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.