/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஸ்ரீ வைஷ்ணவ சபா விழாவில் புத்தகம் வெளியீடு
/
பரமக்குடி ஸ்ரீ வைஷ்ணவ சபா விழாவில் புத்தகம் வெளியீடு
பரமக்குடி ஸ்ரீ வைஷ்ணவ சபா விழாவில் புத்தகம் வெளியீடு
பரமக்குடி ஸ்ரீ வைஷ்ணவ சபா விழாவில் புத்தகம் வெளியீடு
ADDED : அக் 06, 2025 04:47 AM
பரமக்குடி, அக். 6--
-பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைஷ்ணவ சபாவின் 43ம் ஆண்டு விழாவில் விஷ்ணு சகஸ்ரநாம புத்தகம் வெளியீடப்பட்டது.
சபா ஸ்தாபகர் மாதவராமய்யங்கார் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் நாகேஸ்வரன் குரு ஸ்துதி பாடினார். உப தலைவர் மோதிலால் வரவேற்றார்.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தை முன்னாள் சவுராஷ்டிர சபை தலைவர் பார்த்தசாரதி வெளியிட்டார். மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் அர்ச்சகர் முரளிதரன், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் கண்ணன், எமனேஸ்வரம் புரோகிதம் நாகநாதன் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
சுந்தரராஜ பெருமாள் கோயில் மானேஜிங் டிரஸ்டி ரெங்காச்சாரி, சபை தலைவர்கள் பரமக்குடி நாகநாதன், எமனேஸ்வரம் கோவிந்தன், வைஷ்ணவா சபா தலைவர் சுந்தராஜன் வாழ்த்தினர்.
ஆய்வரங்கத்தில் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பார்வையில், ஞான மார்க்கம், யோக மார்க்கம், பக்தி மார்க்கம் என்ற தலைப்புகளில், டாக்டர் ஜவஹர்லால், திருச்சி இந்திரா கணேசன் சித்த மருத்துவர் கல்லுாரி பேராசிரியர் சவுந்தரராஜன், திருப்பதி வெங்கடேஸ்வரா வேத பல்கலை கவுரவ பேராசிரியர் சிராப்திநாதன் பேசினர்.
சபா செயலாளர் கேசவராமன் நன்றி கூறினார். ஆசிரியர் ஜெயபிரகாஷ் ஒருங்கிணைத்தார். இன்று காலை விஷ்ணு சகஸ்ரநாம அகண்ட பாராயணம் நடக்க உள்ளது.