/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் சங்கேத வார்த்தையில் விற்கப்படும் மது பாட்டில்கள்
/
கீழக்கரையில் சங்கேத வார்த்தையில் விற்கப்படும் மது பாட்டில்கள்
கீழக்கரையில் சங்கேத வார்த்தையில் விற்கப்படும் மது பாட்டில்கள்
கீழக்கரையில் சங்கேத வார்த்தையில் விற்கப்படும் மது பாட்டில்கள்
ADDED : நவ 07, 2025 11:15 PM
கீழக்கரை: கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய மீன் மார்க்கெட், மயான பகுதி, கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் மது பாட்டில்கள் சங்கேத வார்த்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
குவாட்டர் ரூ. 50 முதல் 60 வரை விலை கூடுதலாக விற்கப்படும் நிலையில் வாடிக்கையாளராக உள்ள குடிமகன்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது:
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2019ல் இரு டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் இங்கிருந்து இரண்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மதுபானம் வாங்குவதற்காக திருப்புல்லாணி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று குடிமகன்கள் மது வாங்கி வருகின்றனர்.
இவற்றை ஒரு சிலர் குடிசைத் தொழில் போல செய்து வருகின்றனர். திருப்புல்லாணி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குவாட்டர், ஆப் உள்ளிட்ட மதுபானங்களை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு டெலிவரி செய்கின்றனர். இதற்கு இட்லி மாவு, பருத்தி பால் உள்ளிட்ட கோடு வேர்டு எனப்படும் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
நகராட்சி பஸ் ஸ்டாண்ட், அம்மா உணவகம், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரங்களில் குடிமகன்கள் திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர்.
எனவே கீழக்கரை போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதை ஒழிப்பு என்பதை பெயரளவில் மட்டும் சொல்லாமல் தடுப்பு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

