/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
/
உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
ADDED : நவ 07, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: ரோடு பராமரிப்பின் போது உடைந்த குடிநீர் குழாய் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. திருவாடானை- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் ரோட்டோரங்களில் உள்ள செடிகளை அகற்றும் பணி நடந்தது.
மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இப் பணிகள் நடந்த போது திருவெற்றியூர் சர்ச் அருகே குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது.
ஒரு மாதமாகியும் சரி செய்யாததால் புதுப்பையூர் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இச்செய்தி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று திருவெற்றியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டது.

