/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாய் கடித்ததில் சிறுவன் காயம்
/
நாய் கடித்ததில் சிறுவன் காயம்
ADDED : நவ 26, 2025 04:52 AM

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பேரூராட்சி மீனாட்சிபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6ம் வகுப்பு மாணவன் முகேஷ் 11, நாய் கடித்து காயமடைந்தார்.
முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சிலமாதங்களாவே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருக்களில் கூட்டமாக நாய்கள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சிவா மகன் முகேஷ் 11, ஆறாம் வகுப்பு படிக்கிறார். வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கூட்டமாக திரிந்த நாய் கடித்தது. அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டிவிட்டதால் முகேஷ் தப்பினார். பலத்த காயமடைந்த முகேஷ் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேநிலைமை தொடர்ந்தால் மேலும் குழந்தைகள் காயமடையும் சூழல் உள்ளது என்று முகேஷ் தந்தை சிவா கூறினார். முதுகுளத்தூர் பேரூராட்சி துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

