/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2025 04:50 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அனைத்து இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் அரண்மனை வளாகத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் கோட்டத் தலைவர் காரிச்சாமி தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் சேகர், பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முன்னாள் மாநில செயலாளர் ஜான் பிரிட்டோ விரிவாக பேசினார்.
மத்திய அரசு ஊழியர்களின் எட்டாவது ஊதியக் குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியர்களையும் இணைக்க வேண்டும். வணிகம் என்ற பெயரில் டார்கெட் டார்ச்சர் செய்வதை நிறுத்த வேண்டும்.சிறு தவறுகளுக்கு கூட அஞ்சல் ஊழியர்களுக்கு பெரிய தண்டனை வழங்குதலை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர். கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர் பலர் பங்கேற்றனர்.

