
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி,: தொண்டி பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
பேரூராட்சியில் 30க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடும் வகையில் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு வழங்கினார்.
செயல் அலுவலர் திருப்பதி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

