/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார், சரக்கு வாகன கண்ணாடிகள் உடைப்பு
/
கார், சரக்கு வாகன கண்ணாடிகள் உடைப்பு
ADDED : நவ 05, 2024 05:08 AM

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கார் மற்றும் சரக்கு வாகனம் என 7 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துள்ள மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி நகரில் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வைகை ஆறு சர்வீஸ் ரோடு உட்பட வீட்டின் முன்பு மற்றும் ரோட்டோரங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வைகை ஆறு சர்வீஸ் ரோடு, பாரதி நகர், வைகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.
தொடர்ந்து மர்ம நபர்கள் 7 வாகனங்களின் முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இது குறித்து வாகன உரிமையாளர்கள் புகாரில், சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து டவுன் மற்றும் எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.