தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கமுதக்குடி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம்

கமுதக்குடி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம்

கமுதக்குடி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம்


ADDED : செப் 22, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.

பரமக்குடி பி.டி.ஓ., முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் மகேந்திர வர்மன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சக்தி வரவேற்றார். மகளிர் திட்ட மேலாளர் தேவி குத்துவிளக்கேற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் விஜிமாலா மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 106 மாணவர்கள் பயன்பெற்றனர்.

*கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சியில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது. பள்ளி கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுகிபாலின் முன்னிலை வகித்தார். பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் சித்திரை வேலு, கோவிந்தராஜ், முருகவேலு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முருகலட்சுமி, இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்று முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காலை உணவாக சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல், சாம்பார் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

-–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us