ADDED : டிச 16, 2025 05:06 AM

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்துாரைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் புதிதாக உரிமம் பெற்று பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் 50, மனுதாரர் கடைக்கு வந்து லைசென்ஸ் கொடுத்த அதிகாரி நான் தான் எனக்கு அலுவலக செலவு நிறைய இருக்கிறது. ரூ. 15 ஆயிரம் கொடுக்கும்படி முதலில் கேட்டுள்ளார்.
பின்பு இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடர்புகொண்டு ரூ.10 ஆயிரம் கேட்டார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு ரூ.8000 ஐ அலுவலகத்தில் வந்து கொடுக்குமாறு கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்துபவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். முதுகுளத்துார் வேளாண்மை அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு மருந்துகடைகாரர் உதவி இயக்குநர் கேசவராமனிடம் ரசாயணம் தடவிய ரூ.8000 ஐ கொடுக்கும் போது போலீசார் கைது செய்தனர்.

