/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகராட்சி அலுவலகத்தில் பஸ் ஸ்டாண்ட் தள்ளுவண்டி, தட்டு வியாபாரிகள் தர்ணா

ADDED : அக் 14, 2025 03:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் செய்த தட்டு, தள்ளுவண்டி வியாபாரிகளின் பொருட்களை பறிமுதல் செய்ததை கண்டித்து, வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அக்.,4 முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு தள்ளு வண்டிகள், தட்டு வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சிவாஜி தலைமையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவாஜி கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நியமன முறையில் தள்ளு வண்டி, தட்டு வியாபாரம் செய்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து புதிய பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் செய்ய விடாமல் தடுத்து வியாபாரிகளின் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து முறையாக கோரிக்கை மனு அளித்தும் வியாபாரம் செய்யக்கூடாது என மிரட்டுகின்றனர்.
தொடர்ந்து வியபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.