ADDED : அக் 14, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த புள்ளிமான் வாகனம் மோதி பலியானது.
பரமக்குடி மற்றும் அருகில் உள்ள கண்மாய் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசிக்கின்றன.
இவை அவ்வப்போது தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வருகின்றன. நேற்று முன்தினம் காலை மதுரை, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை எட்டிவயல் பகுதியில் புள்ளி மான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று வயது புள்ளி மான் பலியானது.
சத்திரக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டது.