/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கரக்கோட்டை கண்மாயில் சாய்ந்த மின்கம்பங்கள்: தொடர் மின்தடை ராமநாதபுரம் மக்கள் அவதி

ADDED : அக் 14, 2025 03:46 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாயில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் தொடர் மின்தடை ஏற்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சிறிய மழை, காற்று, மின்னல் ஏற்பட்டால் கூட 10 முதல் 20 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்படுகிறது.
மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பட்டறைகள், ஒர்க் ஷாப், கம்ப்யூட்டர் சென்டர் உள்ளிட்ட தனியார் நிறுவனத்தினர். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நகர், புறநகர் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் தினமும் பலமுறை ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், நேற்று சக்கரகோட்டை கண்மாய் கரையில் சில மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன.
அவற்றை சரிசெய்யும் பணி காரணமாக மாலையில் மின் வினியோகத்தில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது. அதன் பிறகு மின்வினியோகம் வழங்கப்பட்டது.
மழை பெய்தாலும் தடையின்றி மின்வினியோகம் வழங்கப்படுகிறது என்றனர்.