/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் இரவு 9:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள் பயணிகள் அவதி

ADDED : ஜூலை 31, 2025 10:56 PM
சாயல்குடி; சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இரவு 9:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வராமல் சாயல்குடி மும்முனை சந்திப்பு வழியாக செல்வதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
சாயல்குடி நகர் பகுதியில் அமைந்துள்ள பேரூராட்சி பஸ் ஸ்டாண்டிற்கு ராமேஸ்வரம், துாத்துக்குடி, திருச்செந்துார், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், அருப்புக் கோட்டை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் தினந் தோறும் இரவு 9:00 மணி முதல் அதற்கு மேல் வரக்கூடிய பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் சாயல்குடி மும்முனை சந்திப்பு வழியாக ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி மார்க்கமாக செல்லும் வழக்கத்தை தொடர்கின்றனர்.
எனவே திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் கோட்ட மேலாளர்கள் உரிய முறையில் பஸ் டிரைவர்களுக்கு வலியுறுத்தி இரவு 9:00 மணிக்கு மேலும் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் வராததால் பொது மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர் என்றனர்.