/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் திடீர் மின் தடை தொடர்வதால் தொழில் பாதிப்பு
/
பரமக்குடியில் திடீர் மின் தடை தொடர்வதால் தொழில் பாதிப்பு
பரமக்குடியில் திடீர் மின் தடை தொடர்வதால் தொழில் பாதிப்பு
பரமக்குடியில் திடீர் மின் தடை தொடர்வதால் தொழில் பாதிப்பு
ADDED : செப் 02, 2025 10:51 PM
பரமக்குடி; பரமக்குடியில் மணிக்கணக்கில் ஏற்படும் தொடர் மின் தடையால் தொழில் பாதிக்கப்படும் சூழலில் முறையான அறிவிப்பு கொடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி காட்டு பரமக்குடியில் உப மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து பரமக்குடி, எமனேஸ்வரம் உட்பட நயினார்கோவில், சத்திரக்குடி மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப் படுகிறது.
கடந்த சில மாதங் களாக திடீர் மின்தடை ஏற்படுகிறது. அப்போது 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரத்திற்கு மேலும் நீடிக்கிறது.
இச்சூழலில் பரமக்குடியில் சிட்கோ துவங்கி பல ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளது.
இதே போல் மருத்துவமனைகள் உள்ளிட்ட மின் விநியோகம் தேவைப்படும் அத்தியாவசிய மின்பொருட்களும் இருக்கின்றன.
நேற்று மாலை 4:15 மணி முதல் 6:15 மணி வரை பரமக்குடியில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் அவ்வப்போது பகுதி வாரியாக மின்தடை ஏற்படுவது வாடிக்கையாக்கி உள்ளது.
இதனால் தொழில் செய்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், கட்டட வேலைகள் என முடங்குவதால் பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது. மின் நிலையங்களில் மின் உபகரணங்கள் பாதிப்பு, தொழில் நுட்ப காரணங்களால் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகிறது.
ஆகவே மின் சப்ளையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ள னர்.