/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழில் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி
/
தொழில் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி
ADDED : ஜன 12, 2026 06:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையத்தினரால் 'நிமிர்ந்து நில்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு தொழில் மேம்பாட்டு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் தமீமா வரவேற்றார். ராமநாதபுரம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மைய மேலாளர் பொன்வேல் முருகன், தொழில்முனைவோர் பற்றியும், அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபடுதல் குறித்தும் பேசினார்.
தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்திஅப்துல்லா பேசினர். ஆடை வடிவமைப்பு துறை தலைவர் சித்ரா தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் செல்வம், கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்தனர்.

