/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 21, 2025 11:14 PM
திருவாடானை: பயிர் சாகுபடியை கணக்கிடும் டிஜிட்டல் கிராப் சர்வேக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:
பயிர் சாகுபடி கணக்கிடும் டிஜிட்டல் கிராப் சர்வே ஆக.,15 முதல் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உட்பிரிவிலும் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கணக்கெடுப்பது நோக்கம். சாகுபடி நிலத்தில் இருந்து அதன் விபரங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும். இப்பணிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவாடானை தாலுகாவில் 47 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.15 என கணக்கிட்டு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் வேளாண் துறை அலுவலகத்தை அணுகலாம் என்றனர்.