/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஜீவா நகரில் கால்வாய் பாலம் சேதம் மாணவர்கள் அச்சத்துடன் பயணம்

ADDED : பிப் 03, 2024 04:52 AM

பரமக்குடி : -பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதி கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
பார்த்திபனுார் மதகு அணை கட்டப்பட்ட ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நுாற்றுக்கணக்கான கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு தேசிய, மாநில மற்றும் கிராமப்புற சாலைகளின் நடுவில் பாலங்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் பாலத்தின் இரண்டு புறங்களிலும் தடுப்பு சுவர்கள் பலமாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 35 ஆண்டுகளைக் கடந்த இப்பாலங்களின் தடுப்புச் சுவர்கள் வாகனங்கள் மோதிய நிலையில் மற்றும் கம்பிகள் துருப்பிடித்து தாமாக உடைய ஆரம்பித்துள்ளது.
இதன்படி எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியில் தடுப்பு சுவர் முற்றிலும் உடைந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சாலையோரம் நடந்து செல்லும் போது ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.
எனவே தடுப்புச் சுவரை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.