/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் ரத்து
/
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் ரத்து
ADDED : அக் 15, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை ; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமைகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு தாலுகாவிலும் கலெக்டர் தங்கி ஆய்வு செய்து வருகிறார். இம்முகாம் அக்.15, 16 ஆகிய இரு நாட்கள் கலெக்டர் தலைமையில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த முகாம் நிர்வாகம் காரணமாக மறு தேதி அறிவிப்பின்றி ரத்து செய்யபட்டுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.