/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை பஸ்ஸ்டாண்ட் அருகே மழை நீர் குளம் போல் தேக்கம்; மக்கள் அவதி
/
கீழக்கரை பஸ்ஸ்டாண்ட் அருகே மழை நீர் குளம் போல் தேக்கம்; மக்கள் அவதி
கீழக்கரை பஸ்ஸ்டாண்ட் அருகே மழை நீர் குளம் போல் தேக்கம்; மக்கள் அவதி
கீழக்கரை பஸ்ஸ்டாண்ட் அருகே மழை நீர் குளம் போல் தேக்கம்; மக்கள் அவதி
ADDED : அக் 15, 2025 12:53 AM

கீழக்கரை; கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகம் செல்லும் வழியில் கிழக்குத் தெருவில் லேசான மழை பெய்தாலே அப்பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது.
இங்கு 300 மீ.,ல் உள்ள சாலையை கடக்க பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் கீழக்கரை நகர் பகுதியில் தாழ்வாக தண்ணீர் செல்ல வழி இல்லாத இடங்களில் கழிவு நீரை உறிஞ்சும் திறன் கொண்ட மோட்டார் மூலம் வாகனங்களில் சேகரித்து வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
* திருப்புல்லாணியில் இருந்து 3 கி.மீ.,ல் கீழக்கரை செல்லும் தோணி பாலத்தில் ஒவ்வொரு மழைக் காலங்களிலும் தண்ணீர் பாலத்தில் தேங்கினால் வெளியேற்றும் வகையில் வடிகால் வசதி அமைக்கப்பட்டிருந்தது. 4 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்ட தார் சாலையில் 150 மீ., நீளமுள்ள தோணி பாலத்தின் இரு புறங்களிலும் மழைநீர் செல்வதற்கான வடிகால் துவாரங்கள் அடைபட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்குவதால் எதிரே வரும் கனரக வாகனங்கள் வேகமாக வரும் போது டூவீலர் மற்றும் சிறிய வாகனங்களில் மீது தண்ணீர் பட்டு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.