/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தலைநகர் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பிட்லைன் இல்லை! புதிய ரயில்களை இயக்க முடியாததால் சிக்கல்

ADDED : செப் 10, 2024 11:50 PM

ராமநாதபுரம் : மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் போதுமான பிட்லைன் இட வசதி இல்லாததால் புதிய ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. கூடுதல் பிட் லைன்கள் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் ரயில் நிலையம் வழியாக தனுஷ்கோடி வரை ரயில்கள் இயக்கப்பட்டு அங்கிருந்து கப்பல்கள் மூலம் இலங்கை செல்வதற்கு வசதியாக போட் மெயில் ரயில் இயக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
இந்த தலங்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து சுற்றுலாவாக ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக பெரிய ரயில் நிலையம் ராமநாதபுரம் ரயில் நிலையம்.
தற்போது இங்கு மூன்று ரயில்கள் மட்டுமே நிறுத்துவதற்கான நடைமேடைகள் உள்ளன. இந்த வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்களுக்கு ஒரு நடைமேடையும், ராமேஸ்வரத்திலிருந்து வரும் ரயில்கள் பரமக்குடி செல்வதற்கு ஒரு நடைமேடையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கூடுதலாக சரக்கு ரயில் நிறுத்தத்திற்கு ஒரு நடைமேடை என மூன்று நடைமேடைகள் மட்டுமே உள்ளன. அவசர தேவைக்கு கூட கூடுதல் நடைமேடை அமைக்கப்படவில்லை. ரயில்களை நிறுத்தி பராமரிப்பு செய்வதற்கு கூட கூடுதலாக நடைமேடைகள் இல்லை. இதனை காரணம் காட்டி தெற்கு ரயில்வே புதிய ரயில்களை ராமநாதபுரத்திற்கு இயக்கப்படாமல் உள்ளது.
கூடுதலாக பிட் லைன் அமைத்தால் அதிகபட்சமாக ரயில்கள் நிறுத்த முடியும். கோச் பராமரிப்பு பணிகள் செய்யப்படலாம்.
- மாதவன், துணைத்தலைவர்
ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கம்