/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே ரோடு விபத்தில் நொறுங்கிய கார் 4 பேர் காயங்களுடன் தப்பினர்

ADDED : டிச 25, 2024 12:25 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருவழிச் சாலையில் கார் - சரக்கு வாகனம் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
கேரளா திருச்சூரில் இருந்து மூன்று பேர் காரில் ராமேஸ்வரம் நோக்கி வந்தனர். காரை வினோத் 32, ஓட்டினார். எதிரில் நயினார்கோவில் அருகே மும்முடிச்சாத்தான் மணிகண்டன் 30, மினி சரக்கு வாகனத்தில் வாழைத்தார் ஏற்றிக்கொண்டு பரமக்குடி நோக்கி ஓட்டி வந்தார்.
ராமநாதபுரம் இரு வழிச்சாலை பொட்டிதட்டி விலக்கு ரோடு பகுதியில் மாலை 4:00 மணிக்கு காரும்- சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதின. இதில் காரின் முன் பகுதி முழுமையாக உருக்குலைந்த நிலையில் டயர் கழன்று உருண்டோடியது. வேன் கவிழ்ந்து வாழைத்தார்கள் ரோட்டில் சிதறின.
காரில் இருந்த மூவர், சரக்கு வாகன டிரைவர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைவரும் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனர். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.