/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் கார்பைடு ரசாயன மாம்பழங்கள் அமோக விற்பனை
/
பரமக்குடியில் கார்பைடு ரசாயன மாம்பழங்கள் அமோக விற்பனை
பரமக்குடியில் கார்பைடு ரசாயன மாம்பழங்கள் அமோக விற்பனை
பரமக்குடியில் கார்பைடு ரசாயன மாம்பழங்கள் அமோக விற்பனை
ADDED : மே 16, 2025 03:09 AM

பரமக்குடி: பரமக்குடியில் கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் அதிகளவில் விற்பனை நடக்கிறது.
மாம்பழம் சீசன் தற்போது களை கட்டி இருக்கிறது. முன்பு கிளிமூக்கு, இமாம் பசந்த் என குறிப்பிட்ட ரகங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. தற்போது ஒட்டு ரகத்தின் அடிப்படையில் ஏராளமான மாம்பழங்கள் சந்தைகளில் கிடைக்கிறது.
இவற்றின் விலையை அறிய முடியாமல் மக்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் மாம்பழங்களை மொத்தமாக விலை பேசி எடுத்து வரும் வியாபாரிகள் அதனை வாரக்கணக்கில் வைத்து பழுக்க விடுவதில்லை. மாறாக உடனுக்குடன் பணம் பார்க்கும் நோக்கில் அவற்றை செயற்கை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கின்றனர்.
இதனால் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகிறது. தற்போது பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சித்திரை திருவிழா என பல்வேறு விழாக்கள் நடக்கிறது.
அப்போது மாம்பழங்கள் பஜார் உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளில் விற்பனை அதிகளவில் உள்ளது. இதன்படி இயற்கைக்கு மாறான மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் தோல் குறைபாடுடன் பழங்கள் விற்கப்படுகிறது.
மக்களும் காய் பருவத்தில் பழங்களை வாங்கி வைக்கோல் அல்லது அரிசிக்குள் வைத்து பழுக்க வைப்பது நல்லது. மேல் தோல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்க சத்தியக்கூறுகள் இருக்கின்றன.
ஆகவே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்துவதை விடுத்து, ஒவ்வொரு நாளும் சீசன் மாம்பழ விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.