/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்ற 8 பேர் மீது வழக்கு
/
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்ற 8 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்ற 8 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்ற 8 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 13, 2024 04:50 AM
தேவிபட்டினம் : நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் தயாரித்து, சொத்தை விற்பனை செய்த எட்டு பேர் மீது தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் சேதுபதி நகர் 5 தெருவைச் சேர்ந்த கலாதரன். இவரது பூர்வீக சொத்து தேவிபட்டினம் அருகே நாரணமங்கலம் பகுதியில் 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது உறவினர்கள் விவசாயம் செய்கின்றனர்.
இந்நிலையில், பூர்வீக சொத்தை பிரித்து தன்னுடன் உடன் பிறந்த அனைவரும் சமமாக பிரித்துக் கொள்ள முடிவு செய்து, நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்கான ஏற்பாடுகளில் கலாதரன் ஈடுபட்டார்.
அப்போது, இவர்களது பூர்வீக நிலம் மே 2023ல் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்து கலாதரன் கொடுத்த புகாரில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைச்யைச் சேர்ந்த கண்ணகி, பிச்சம்மாள், அசனபசரி, ராமநாதபுரம் மலைக் கண்ணன், நாகராஜ் சக்கரக்கோட்டை முருகன், ஏ.மணக்குடி காத்த முத்து, சிங்கனேந்தல் முனியசாமி ஆகியோர் மீது தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.