/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
/
மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
ADDED : ஜன 07, 2024 04:17 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காந்திநகரை சேர்ந்தவர் காட்டுராணி 60. இவரது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி 38, என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் காட்டுராணி வீட்டிற்கு வந்த முனியசாமி மனைவியுடன் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். தடுக்க முயன்ற காட்டு ராணியை முனியசாமி தாக்கினார். தலையில் காயம் அடைந்த காட்டு ராணி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காட்டு ராணி புகாரில் முனியசாமி மீது திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., மாரி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.