ADDED : மார் 14, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்- திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை களக்குடி விலக்கு முதல் களக்குடி கிராமம் வரை ரோடு சீரமைக்கும் பணி நடக்கிறது.
இங்கு ரோடு பணி நடந்த போது ரோடு தரமற்றதாக அமைக்கப்படுவதாகக் கூறி சாலையை இரும்பு கம்பியால் இளைஞர்கள் பெயர்த்தனர். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் தகராறுசெய்தனர்.
இதுகுறித்து ரோடு அமைக்கும் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் தேவகோட்டை காந்தி பெரியார் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 57, புகாரில் களக்குடி பாலமுருகன் 34, மகேந்திரன் 25, மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., விஷ்ணு சந்திரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

