/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் கடத்தலில் ஓய்வு டி.எஸ்.பி., உட்பட 10 பேர் மீது வழக்கு: மூன்று பேர் கைது
/
மணல் கடத்தலில் ஓய்வு டி.எஸ்.பி., உட்பட 10 பேர் மீது வழக்கு: மூன்று பேர் கைது
மணல் கடத்தலில் ஓய்வு டி.எஸ்.பி., உட்பட 10 பேர் மீது வழக்கு: மூன்று பேர் கைது
மணல் கடத்தலில் ஓய்வு டி.எஸ்.பி., உட்பட 10 பேர் மீது வழக்கு: மூன்று பேர் கைது
ADDED : டிச 01, 2024 02:20 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ரமசாமி உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களில் மூன்று பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் பஜார் எஸ்.ஐ., கார்த்திகை ராஜா, எஸ்.எஸ்.ஐ., ஜெயபாலன், ஏட்டு ராஜபஞ்சம் ஆகியோர் ஆற்று மணல் திருட்டு குறித்து வந்த தகவலின் அடிப்படையில் நீலகண்டி ஊருணி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற டிப்பர் லாரியை அவர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் உடனடியாக நிற்காமல் சற்று துாரமாக சென்று லாரியை நிறுத்தி விட்டு அதிலிருந்தவர்கள் தப்பிச் சென்றனர். லாரியை சோதனையிட்ட போது ஆற்று மணல் ஏற்றிச் சென்றது தெரிந்தது.
மணல் கொண்டு செல்ல முறையான உரிமமும் இல்லை. இதில் ஈடுபட்டதாக லாரி டிரைவர் முதலுார் வடக்குத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் மணிகண்டன் 32, வேல்முருகன் மகன் லோகநாதன் 27, சுப்பிரமணியன் மகன் மதுர சேகர் 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இக்கடத்தலில் முதலுார் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராமசாமி, அவரது மகன் மனோஜ், வேலுச்சாமி மகன் கார்த்திக், முனியசாமி மகன் கந்தபாண்டி, தங்கவேல் மகன் ராமர், கஜேந்திரன் மகன் விக்னேஷ், மோகன் மகன் கபில் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மணல் எங்கிருந்து கடத்தப்பட்டு எங்கு கொண்டு செல்லயிருந்தது என போலீசார் விசாரிக்கின்றனர்.

