/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி 4 பேர் மீது வழக்கு
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி 4 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி 4 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 22, 2025 09:14 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முதுகுளத்துார் அருகே காக்கூர் பகுதியைச் சேர்ந்த துணையன் மனைவி சுந்தரவள்ளி 65. இவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் காக்கூரில் உள்ளது. இதனை அவர் விற்பனை செய்ய முயன்றார். அப்போது நிலம் வேறு ஒருவர் பெயரில் இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சுந்தரவள்ளி எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தார். அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் காக்கூரைச் சேர்ந்த குருசாமி இந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து தன் பெயரில் பவர் பத்திரம் பெற்றுள்ளார். பின் முதுகுளத்துார் அருகே சடையனேரியைச் சேர்ந்த இருளாண்டி மகன் ரவிச்சந்திரனுக்கு நிலத்தை விற்பனை செய்துள்ளார். ரவிச்சந்திரன் கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன், சென்னையைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து குருசாமி, ரவிச்சந்திரன், கார்த்திகேயன், செந்தில்குமார் மீது நில மோசடி வழக்குப் பதிந்து தேடுகின்றனர்.