/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.1 கோடி மோசடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு
/
ரூ.1 கோடி மோசடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு
ரூ.1 கோடி மோசடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு
ரூ.1 கோடி மோசடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 16, 2025 11:20 PM
தொண்டி: கணவர் ரூ.1 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவத்தில், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் பெமினா பேகம் 30. இவரது கணவர் கலந்தர்லியாஸ், வெளிநாட்டில் பொருட்களை வாங்கி கொடுக்கும் வேலை பார்க்கிறார்.
எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அக்பர் சுல்தான், கலந்தர் யாசின், சாகுல் ஹமீது, முகமது ஆசிக், சர்தார் ஆகியோர் பெமினா பேகம் வீட்டிற்கு சென்று இலங்கையில் இருக்கும் போது ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களை கொடுக்காமல் உனது கணவர் எங்களை ஏமாற்றி விட்டார்.
அந்த பொருட்களை திருப்பி தர வேண்டும் என தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். பெமினா பேகம் புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் தேடி வருகின்றனர்.