/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு தின விழா
/
அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு தின விழா
அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு தின விழா
அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : நவ 16, 2025 11:21 PM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ். மடையில் உள்ள அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி மேலாளர் லட்சுமி அம்மாள் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. பள்ளி முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் தீரஜ் லட்சுமணபாரதி வரவேற்றார். அமிர்த வித்யாலயா விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து விமான நிலைய இன்ஜினியர் சந்தீப் உட்பட பலர் பங்கேற்றனர்.
குழு மற்றும் தனிநபர் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ், வெற்றிக்கோப்பை பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரமிடு, ஸ்கேட்டிங், வில்வித்தை, நடனம், சிலம்பம், இசைக்கச்சேரி, கே.ஜி., மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விளையாட்டுதுறை ஆசிரியர் சர்மா, பேபி ஷாலினி ஏற்பாடுகளை செய்தனர்.