/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மோதி ஆசிரியர் பலி வாலிபர் மீது வழக்குப்பதிவு
/
டூவீலர் மோதி ஆசிரியர் பலி வாலிபர் மீது வழக்குப்பதிவு
டூவீலர் மோதி ஆசிரியர் பலி வாலிபர் மீது வழக்குப்பதிவு
டூவீலர் மோதி ஆசிரியர் பலி வாலிபர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 23, 2025 11:38 PM
தொண்டி: தொண்டி அருகே மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் 37. தொண்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆக.,20 ல் பள்ளி முடிந்து மாலை 5:00 மணிக்கு டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியை நோக்கி சென்றார். அப்போது மூன்று சிறுவர்கள் ஒரு டூவீலரில் அமர்ந்தபடி வேகமாக பின்னால் வந்து கார்த்திக் மீது மோதினர்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நேற்று முன்தினம் இறந்தார். தொண்டி போலீசார் டூவீலர் ஓட்டி மோதிய முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மலைராஜ் மகன் மன்மதனை 19, தேடி வருகின்றனர்.