ADDED : நவ 07, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நொச்சியூரணி செல்லும் ரோட்டில் காவிரி குடிநீர் செல்லும் குழாய் உடைந்து குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் கூறியதாவது: நொச்சியூரணி மெயின் ரோட்டில் சமீபத்தில் காவிரி குடிநீர் செல்ல பெரிய குழாய் அமைத்தனர். சமீப காலமாக அந்த குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்குகிறது. நகராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் அப்பகுதியில் குளம் போல் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது என்றார்.

