ADDED : மார் 08, 2024 12:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார்--ராமநாதபுரம் சாலை காக்கூர் காமராஜபுரம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
முதுகுளத்துார்--ராமநாதபுரம் சாலை காக்கூர் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சாலையோரத்தில் ராட்சத குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காக்கூர் காமராஜபுரம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
குடிநீர் எந்த பயன்பாடுமின்றி தரிசு நிலங்களில் தேங்கி வீணாகிறது. இதனால் இவ்வழியே செல்லும் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

