/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைகிறது: டி.எஸ்.பி., பேச்சு
/
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைகிறது: டி.எஸ்.பி., பேச்சு
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைகிறது: டி.எஸ்.பி., பேச்சு
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைகிறது: டி.எஸ்.பி., பேச்சு
ADDED : டிச 19, 2025 05:18 AM

கமுதி: கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் சிசிடிவி கேமரா திறப்பு விழாவின் போது கிராமங்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைந்து வருவதாக டி.எஸ்.பி., சண்முகம் பேசினார்.
கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் குற்றங்களை தடுப்பதற்காகவும், போலீசுக்கு உதவியாகவும் கிராமத்தின் சார்பில் கிராமம் முழுவதும் 16 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழாவில் பங்கேற்று கண்காணிப்பு அறையை முதுகுளத்தூர் டி.எஸ்.பி., சண்முகம் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:
ஆனையூர் கிராமத்தில் பாதுகாப்பிற்காக 16 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவை போலீசுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறைகிறது.
மேலும் முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதுகுளத்துார் சப் டிவிஷனுக்கு உட்பட்ட கிராமங்களில் இதுவரை 1100 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., திட்டத்தில் 550 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனையூர் முஸ்லிம் ஜமாத் முத்தவல்லி பீர்முகமது, முன்னாள் இன்ஸ்பெக்டர் இஸ்மாயில், தொழிலதிபர் காதர், எஸ்.ஐ., ராமையா உட்பட ஜமாத் நிர்வாகிகள் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். மீரான்கனி நன்றி கூறினார்.

