/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவருக்கு தினமலர் காலண்டர் வழங்கினார் தலைமை ஆசிரியர்
/
மாணவருக்கு தினமலர் காலண்டர் வழங்கினார் தலைமை ஆசிரியர்
மாணவருக்கு தினமலர் காலண்டர் வழங்கினார் தலைமை ஆசிரியர்
மாணவருக்கு தினமலர் காலண்டர் வழங்கினார் தலைமை ஆசிரியர்
ADDED : டிச 19, 2025 05:19 AM

திருவாடானை: அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தினமலர் காலண்டர் இலவசமாக வழங்கியதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவாடானையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியராக கதிரவன் பணியாற்றுகிறார். தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடப்படுகிறது.
அந்த காலண்டர்களை சொந்த செலவில் விலைக்கு வாங்கி தலைமை ஆசிரியர் கதிரவன் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார். பெற்றோர் கூறியதாவது:
தினமலர் காலண்டர் பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்று தினசரி மற்றும் மாதத்திற்கான ஜோதிட தகவல்களை வழங்கும் ஒரு நம்பகமாக திகழ்கிறது.
நல்ல நேரம், ராகு காலம், குளிகை, அஷ்டமி, நவமி, நட்சத்திரம், திதி, சூரிய உதயம் மற்றும் முக்கிய விேஷச நாட்கள் போன்ற பல ஜோதிட தகவல்கள் உள்ளன.
சுப காரியங்களுக்கான நல்ல நேரம், பஞ்சாங்க விபரங்கள், பண்டிகைகள், விரத நாட்கள் போன்ற முக்கிய நாட்களையும் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மாணவர்களுக்கு இலவசமாக தினமலர் காலண்டர் வழங்கிய ஆசிரியர் செயல் பாராட்டுக்குரியது என்றனர்.
தலைமை ஆசிரியர் கதிரவன் ஏற்கனவே ரூ.60 ஆயிரம் சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கழிப்பறை கட்டினார்.
மேலும் வாரத்தில் புதன் அன்று அணிந்து வரும் வகையில் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு வண்ண சீருடை வழங்கியுள்ளார்.

