திருவாடானையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் மந்தம்
திருவாடானையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் மந்தம்
ADDED : ஆக 14, 2026 12:21 AM
திருவாடானை: திருவாடானை தாலுகா வில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கிய நிலையில் இதுவரை 1 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளன. வீட்டிற்கு வரும் அலுவலர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு நடக்கின்றன. திருவாடானை தாலுகாவில் ஆக.,1 முதல் கணக் கெடுப்பு பணிகள் முறைப்படி துவங்கப்பட்டன.
இப்பணிக்காக சிறப்பு பயிற்சி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, வீடுகள் தோறும் நேரில் சென்று விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இருப்பினும் கணக் கெடுப்பு துவங்கி 11 நாட்கள் ஆகியும் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. தாலுகா முழுவதும் இதுவரை கணக்கிடப்பட்ட புள்ளி விபரங்களின் படி 1 சதவீதம் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் முடி வடைந்துள்ளது. கணக் கெடுப்பு பணிகள் இவ் வளவு மந்தமாக நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு செல்லும் போது வீடுகள் பூட்டி யிருப்பது, மக்கள் பணிகள் நிமித்தமாக வெளியே சென்றிருப்பது மற்றும் கேட்கப்படும் விபரங் களுக்கு தேவையான ஆவணங்களை உடனே தேடி எடுக்காமல் காலதாமதம் செய்வது, சில இடங்களில் மக்கள் கணக் கெடுப்பு அலுவலர்களுக்கு சரியான தகவல்களை வழங்க தயங்கு வதும், சந்தேக கேள்விகள் எழுப்புவதும் தாமதத்திற்கு காரணமாகின்றன.
இது குறித்து திரு வாடானை தாசில்தார் ஆண்டி கூறுகையில், அரசின் திட்டங்கள், நன்மைகள் தாலுகா மக்களுக்கு சரியாக சென் றடைய இந்த மக்கள் தொகை புள்ளி விபரங்கள் மிகவும் அவசியம். எனவே வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு எவ்வித தயக்கமின்றி முழுமையான, துல்லியமான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். தாலுகாவின் மேம்பாட்டிற்கு இந்த கணக்கெடுப்பு முக்கியமானது என்பதால் மக்கள் இதில் முழு அக்கறை காட்டி ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
