/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கற்பிப்போம் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
/
கற்பிப்போம் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
கற்பிப்போம் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
கற்பிப்போம் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
ADDED : டிச 10, 2024 04:56 AM
ராமநாதபுரம்: பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் இலவசமாக குறுகிய காலபயிற்சி முடித்த மாணவிகளுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் ராமநாதபுரம் ஆதி திராவிடர் பெண்கள் கல்லுாரி விடுதி மாணவிகளுக்கு பாத்திமா கல்வி அறக்கட்டளை மூலம் இலவச 'ஆரி ஒர்க்' குறுகிய கால பயிற்சி நடந்தது.
இப்பயிற்சி முடித்த 20 மாணவிகளுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ஜவஹர் பாண்டி, பாத்திமா கல்வி அறக்கட்டளை நிர்வாகி முகமது சலாவுதீன் பங்கேற்றனர்.