ADDED : செப் 01, 2025 10:18 PM
ஆர்.எஸ்.மங்கலம் : உப்பூர் பகுதியில் ரோட் டோரம் நின்றிருந்த பெண் ணின் நான்கரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலவயல் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் மனைவி பழனிமுத்து 32. இவர் கட்டட வேலை செய்கிறார்.
இவர் ஆக.,29ல் ராமநாதபுரம் சென்று விட்டு மாலையில் உப்பூர் பஸ் ஸ்டாப் வந்தவர் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த தனது டூவீலரை எடுத்து கொண்டு ஊருக்கு திரும்பி உள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை உப்பூரில் இருந்து சிறிது தொலைவு சென்ற நிலையில், ரோட்டில் ஓரமாக டூவீலரை நிறுத்தி விட்டு உறவினருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவ்வழியாக டூவீலரில் பின் தொடர்ந்த ஹெல்மெட் அணிந்திருந்த அடை யாளம் தெரியாத இருவர் பழனி முத்து அணிந் திருந்த நான்கரை பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., கோவிந்தன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார். மர்ம நபர்கள் பறித்துச் சென்ற நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.