/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவு திருவிழா பயணத்திற்கு கட்டணம் வசூல்
/
கச்சத்தீவு திருவிழா பயணத்திற்கு கட்டணம் வசூல்
ADDED : ஜன 13, 2024 01:18 AM

ராமநாதபுரம்:-பிப்.23, 24ல் கச்சத்தீவில் நடக்கும் திருவிழா பயணத்திற்கு மீனவர்களின் விசைப்படகுகளில் கட்டணம் வசூலித்து அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பாரம்பரிய மீனவர்கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் ஜன.5ல் மனு அளித்தனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்ல இந்திய- இலங்கை அரசுகள் இணைந்து அனுமதியை வழங்குகின்றனர். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் திருவிழா பிப்.23, 24ல் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த திருவிழா சம்பந்தமாக 2018ல் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாரம்பரிய மீனவர்கள் தங்கள் நாட்டுப்படகில் குடும்பத்தினர், உறவினர்களை அழைத்துச்செல்ல தகுந்த ஏற்பாடுகளைசெய்து தர வேண்டும்.
பயணிகள் செல்வதற்கு அரசு சார்பில் பயணிகள் கப்பலை வாடகைக்கு எடுத்து அழைத்துச் செல்லவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாறாக கச்சத்தீவு பயணம் செல்லும் பயணிகளிடம் மீன்பிடிவிசைப்படகுகளில் கட்டணம் வாங்கிக் கொண்டு அழைத்துச் செல்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியபாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தேசியபாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறியுள்ளார்.