/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சதுரங்கநாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா
/
சதுரங்கநாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா
ADDED : ஜூலை 29, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே மேலப் பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன், சந்தன கருப்பு சுவாமி கோயிலில் 22ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது.
கோயிலில் ஜூலை 25 காலை கணபதி ஹோமம், கொடியேற்றம், அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர்.
தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆக.,2ல் குத்து விளக்கு பூஜை, ஆக.,3ல் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் விரதமிருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்க உள்ளனர்.
ஆக.,4 காலை காப்பு களையப்பட்டு பாலபிஷேகம், பொங்கல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.
--

