sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சோதனைச்சாவடி மையம்; திறந்து வைத்தார் எஸ்.பி.,

/

சோதனைச்சாவடி மையம்; திறந்து வைத்தார் எஸ்.பி.,

சோதனைச்சாவடி மையம்; திறந்து வைத்தார் எஸ்.பி.,

சோதனைச்சாவடி மையம்; திறந்து வைத்தார் எஸ்.பி.,


ADDED : நவ 12, 2024 04:56 AM

Google News

ADDED : நவ 12, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு காக்கூர் விலக்கு ரோட்டில் விபத்து தடுப்பு மற்றும் போலீசார் சோதனைக்காக தற்காலிகமாக தகர ெஷட்டில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் போலீசார் மழை,வெயில் நேரங்களில் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து தற்போது புதிதாக சோதனைச் சாவடி கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. எஸ்.பி.,சந்தீஷ் திறந்து வைத்தார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது:

மக்களின் பாதுகாப்பிற்காக முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு காக்கூர்விலக்கில் புதிதாக சோதனைச் சாவடி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு போலீசார்பாதுகாப்பு பணியில் இருந்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே பொதுமக்கள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

தொடர்ந்து முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் தாலுகா காவல் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், எஸ்.ஐ.,க்கள் சக்திவேல், சுரேஷ்குமார் உட்பட போலீசார் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us