/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆறு வழிச்சாலை, 23 கண்மாய்கள் சீரமைப்பு ராமநாதபுரத்தில் 9 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு
/
ஆறு வழிச்சாலை, 23 கண்மாய்கள் சீரமைப்பு ராமநாதபுரத்தில் 9 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு
ஆறு வழிச்சாலை, 23 கண்மாய்கள் சீரமைப்பு ராமநாதபுரத்தில் 9 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு
ஆறு வழிச்சாலை, 23 கண்மாய்கள் சீரமைப்பு ராமநாதபுரத்தில் 9 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு
ADDED : அக் 04, 2025 03:34 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலை பகுதி 4 வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும். 23 கண்மாய் சீரமைப்பு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ராமநாதபுரத்திற்கு வந்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலையில் பேராவூர் திடலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முதல்வர் காலை 9:30மணிக்கு வந்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டூவீலர்களை வழங்கினார். அதன்பிறகு ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை திட்டபணிகள், மகளிர் குழுவினர் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.
விழாவில் ரூ. 176 கோடியே 59 லட்சத்தில் 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.134 கோடியே 45 லட்சத்தில் 150 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பில் 50 ஆயிரத்து 752 பேருக்கு ரூ.426 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
விழாவில் ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா உட்பட பலர் பங்கேற்றனர்.
வரவேற்பு ராமநாதபுர வந்த முதல்வர் ஸ்டாலினை பார்த்திபனுார் எல்லையில் முதுகுளத்துார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,முருகவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.உடன் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதேபோன்று பரமக்குடி அருகே முதுகுளத்துார் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.