நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் செல்லும் வழியில் வெள்ளப்பட்டி தீவு முனியசாமி கோயில் உள்ளது.
வருடாந்திர கொடை உற்ஸவத்தை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சார்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட 108 சேவல் மற்றும் 51 கிடாய்கள் சமைக்கப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக மூலவர் தீவு முனியசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அதிகாலையில் இருந்து இரவு வரை ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அசைவ அன்னதான உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.