/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் காப்பீட்டு அட்டை பதிவு முகாம் நாளை துவக்கம்
/
முதல்வர் காப்பீட்டு அட்டை பதிவு முகாம் நாளை துவக்கம்
முதல்வர் காப்பீட்டு அட்டை பதிவு முகாம் நாளை துவக்கம்
முதல்வர் காப்பீட்டு அட்டை பதிவு முகாம் நாளை துவக்கம்
ADDED : மே 02, 2025 06:13 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விடுப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் ஊராட்சி அலுவலம் வாரியாக (நாளை) மே 3 முதல் ஜூலை 16 வரை நடக்கிறது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். இத் திட்டத்தின் கீழ் 1090 மருத்துவ அறுவைசிகிச்சைகளும், 52 நோய் பரிசோதனைகளும் அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும் மற்றும் 8 உயர் சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட மக்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் கிராம வாரியாக மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி அலுவலகங்களில் நடக்கிறது.
முதற்கட்டமாக கடலாடி தாலுகாவில் மே 3ல் ஏ.உசிலங்குளத்திலும், மே 6ல் கடலாடியிலும், மே 7 ல் கன்னிராஜபுரத்திலும், மே 8 ல் கீழக்கிடாரத்திலும், மே 9ல் நரிப்பையூரிலும், மே 10 ல் பெரியகுளத்திலும், மே 13ல் எஸ்.தரைக்குடியிலும், மே 14ல் சாயல்குடி ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமிற்கு பதிவு செய்ய வருவோர் ரேஷன் கார்டு நகல், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். இதுவரை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் முகாம்களில் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலரை 73730 04588 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.